Blog Archives

‘காண்டீபம்’ பிறந்தது!

-ஆசிரியர் குழு

kandeepam-fun-1

‘காண்டீபம்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன், ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி, ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சிவானந்தன் ஆகியோர்.

 

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் திருப்பூரில் கடந்த 2016, அக்டோபர் 11-இல் நடைபெற்ற  விஜயதசமி விழாவில் தேசிய விழிப்புணர்வுக் காலாண்டிதழான ‘காண்டீபம்’  முதல் இதழ் வெளியிடப்பட்டது.

ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, விஜயதசமி விழா, காண்டீபம் காலாண்டிதழ் வெளியீட்டு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழாவை, தேசிய சிந்தனைக் கழகம், அறம் அறக்கட்டளை, ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2016, அக். 11-ஆம் தேதி  நடத்தின.

விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சா.சிவானந்தன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன், திருப்பூர் கோட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் ‘ராமானுஜத்தின் இன்றைய அவசியம்’ என்ற தலைப்பில், தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி பேசினார்.

‘காண்டீபம்’ காலாண்டிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கலாநிதி வெளியிட, ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி பெற்றுக் கொண்டார். தஞ்சை வெ.கோபாலன் எழுதிய ‘சுதந்திர கர்ஜனை’ நூலும் விழாவில் வெளியிடப்பட்டது.

book-1-wrapper

ஐப்பசி-2016 இதழ்

நிறைவாக,  ‘வெற்றிக்கு வழி’ என்ற தலைப்பில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்  “தேசிய சிந்தனை வளர்க்கும் பணியை பத்திரிகைகள் அடிப்படைப் பணியாக மேற்கொள்ள வேண்டும். நமது இளைஞர்கள் உலக அளவில் சாதனை புரிய தேசிய சிந்தனையே உரமாக இருக்கும்” என்றார்.

விழாவில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் குழலேந்தி, செயலாளர் சத்தியப்பிரியன், கோட்டச் செயலாளர் சு.சத்தியநாராயணன், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பக்தவத்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Advertisements

வீரசைவத்தை தமிழில் வளர்த்தவர்

-ஆசிரியர் குழு

சாந்தலிங்க அடிகளார்

சாந்தலிங்க அடிகளார்

(குருபூஜை: மாசி – மகம்)
 .
அருள்மிகு சாந்தலிங்க அடிகளார், திருக்கயிலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி திருப்பேரூர் ஆதீனத்தின் ஆதிகுரு முதல்வராக விளங்கியவர்.  தொண்டை நாட்டில் தோன்றிய இவரது காலம் 17ம் நூற்றாண்டு என்பர்.
 .
திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும் சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீன நிறுவனர் பஞ்சாக்கர தேசிகரின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கி, திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவபிரகாசரைக் குருவாகப் பெற்றவர் சாந்தலிங்க அடிகள்.
 .
தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில், சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டனர். அவ்வாறு தொடங்கப்பெற்ற மரபே ‘திருக்கயிலாய மரபு’ எனத் தோற்றம் பெற்றது.
.
கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியம் பெருமானுக்கு அருளிச் செய்கிறார். அவ்வுண்மையினை நந்தியம் பெருமான் தனது மாணாக்கர் சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். சனற்குமாரர் தமது முதல் மாணவராக விளங்கிய சத்திய ஞானதரிசினிகளுக்குச் செம்பொருளை அருளிச் செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தை பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு ‘திருக்கயிலாய அகச்சந்தான மரபு’  என்று போற்றப் பெறுகிறது.
 .
இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார். இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக் களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டு நம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை அகத்தால் இனிதுநோக்கி நம்பிக்கு அருளினார். அன்றுமுதல் நம்பி மெய்க்கண்டார் ஆனார்.
.
இவரது தத்துவஞானத்தை உணர்ந்த அச்சுதக் களப்பாளரின் குலகுரு சகலாகம பண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் ‘சிவஞான சித்தியார்’ என்ற நூலை அருளினார்.
 .
இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம் மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) அருளிய பெருமைக்குரியவர். இவர் வழிவந்த அருள்நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாய மூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர்.
 .
இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவபிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்த மரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவபபிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப் பணியாற்றி வந்தார்.
 .
அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும்,அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவபிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து ‘வீரசைவ தீக்கை’ அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார். அங்கு கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவபிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது.
.
தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம், சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்து பல அருட்பணிகளை ஆற்றிவந்தார்.
 .
பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி சிவபிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையை சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்க சுவாமிகள் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார். ஞானாம்பிகையார் முதிர்ந்த அறிவோடு இல்லற நெறியில் நின்று அருட்பணிகளில் ஈடுபட்டார்.
 .
சாந்தலிங்கப் பெருமான், மக்கள் உய்யும் பொருட்டு, கொலைமறுத்தல், வைராக்கிய சாதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் ஆகிய நூலகளை அருளிச் செய்தார். இவை முறையே, சீவகாருணியத்தையும் ஈசுவர பக்தியையும், பாச வைராக்கியத்தையும் பிரம ஞானத்தையும் உணர்த்துவன.
 .
மாணாக்கர் பலர் நம் குருமுதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகள் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்திப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும் உமையம்மையுமாக காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர்.
 .
இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக் குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம், முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்ப்போம்” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கிய துறவியாகிறார்.
 .
ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின் முகப்பில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.
.
குமாரதேவர் எனும் கன்னட அரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருஉள்ளக்குறிப்பின்படிப் பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில் ) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசா துறவு, சுத்தசாதகம் முதலிய பல சாத்திரங்களையும் அருளினார்.
 .
திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பர தேசிகர் என்பார். அவரை குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப் பெருமானிடம் அழைத்துவந்தார். சிதம்பர சுவாமிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்க அடிகள் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகள் எழுதிய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும் நுட்பமும் செறிந்து விளங்குகிறது.
இச்சிதம்பர சுவாமிகள் சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து, அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் ‘திருப்போரூர் சந்நிதிமுறை’ என்று வழங்கப்படுகின்றன.
.
இறையருளோடு குருவருளும் பெற்று பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றி வளர்த்த சாந்தலிங்கப் பெருமான் ஒரு மாசித் திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில், ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும் திருமடமும் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள  பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
 .
தகவல் உதவி:
 .
பேரூர் ஆதீனம்

 

தவப்புதல்வர்கள் (வைகாசி)

-ஆசிரியர் குழு

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:

வைகாசித் திங்கள் (15.05.2015  – 14.06.2015)

 

திருக்கோஷ்டியூர் நம்பி

(வைகாசி- ரோகிணி)

மே 19

நமிநந்தி அடிகள்

(வைகாசி- பூசம்)

மே 23

சேக்கிழார் பெருமான்

(வைகாசி – பூசம்)

மே 23

சோமாசி மாறனார்

(வைகாசி – ஆயில்யம்)

மே 24

குரு அர்ஜுன் தேவ்

(பலிதானம்: மே 30)

நம்மாழ்வார்

(வைகாசி – விசாகம்)

ஜூன் 1

அன்னமாச்சாரியார்

(வைகாசி – விசாகம்)

ஜூன் 1

காஞ்சி மகா பெரியவர்

(வைகாசி – அனுஷம்)

ஜூன் 2

திருஞான சம்பந்தர்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

திருநீலகண்ட யாழ்ப்பாணர்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

திருநீலநக்க நாயனார்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

முருக நாயனார்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

கழற்சிங்க நாயனார்

(வைகாசி – பரணி)

ஜூன் 13

 ***

சான்றோர் – மலர்வும் மறைவும்

 .
(பிறப்பு: மே 16)

ராஜாராம் மோகன்ராய்

(பிறப்பு: மே 22)

செண்பகராமன் பிள்ளை

(பலிதானம்: மே 26)

வீர சாவர்க்கர்

(பிறப்பு: மே 28)

தேவி அகல்யாபாய் 

(பிறப்பு: மே 31)

பிர்ஸா முண்டா

(பிறப்பு: மே 31) (பலிதானம்: ஜூன் 9)

குருஜி கோல்வல்கர்

(நினைவு: ஜூன் 5)

ஜி.டி.பிர்லா

(நினைவு: ஜூன் 11)

 

 

 

 

 

தவப்புதல்வர்கள் (சித்திரை)

-ஆசிரியர் குழு

ஆதி சங்கரர்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:

சித்திரைத் திங்கள் (14.04.2015  – 14.05.2015)

 

வடுக நம்பி

(சித்திரை – அஸ்வினி)

(ஏப்ரல் 19)

சிறுத்தொண்ட நாயனார் 

(சித்திரை- பரணி)

(ஏப்ரல் 20)

உய்யக் கொண்டார்

(சித்திரை – கார்த்திகை)

(ஏப்ரல் 21)

மங்கையர்க்கரசியார் 

(சித்திர- ரோகிணி)

(ஏப்ரல் 22)

ராமானுஜர்

(சித்திரை- திருவாதிரை)

(ஏப்ரல் 24)

விறன்மிண்ட நாயனார்

(சித்திரை- திருவாதிரை)

(ஏப்ரல் 24)

ஆதிசங்கரர் 

(சித்திரை- புனர்பூசம்)

(சித்திரை- வளர்பிறை பஞ்சமி)*

(ஏப்ரல் 23)

நம்பியாண்டார் நம்பி  

(சித்திரை- புனர்பூசம்)

(ஏப்ரல் 25)

முதலி ஆண்டான்

(சித்திரை – புனர்பூசம்)
(ஏப்ரல் 25)

ஸ்ரீ தியாகராஜர்

(சித்திரை- பூசம்)

(ஏப்ரல் 26)

சிவஞான சுவாமிகள்
(சித்திரை – மகம்)
(ஏப்ரல் 28)

உமாபதி சிவாச்சாரியார்

(சித்திரை – ஹஸ்தம்)

(மே 1)

இசைஞானியார்

(சித்திரை- சித்திரை)

(மே 2)

மதுரகவியாழ்வார் 

(சித்திரை- சித்திரை)

(மே 2)

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

(சித்திரை- சுவாதி)

(மே 3)

திருநாவுக்கரசர் (அப்பர் )

(சித்திரை- சதயம்)

(மே 12)

***

 

சான்றோர்- மலர்வும் மறைவும்:

(பிறப்பு: ஏப். 14)
 .
விஸ்வேஸ்வரய்யா
(நினைவு: ஏப். 14)
 .
(பிறப்பு: ஏப். 17)

.
(பிறப்பு: ஏப். 22)
 .
தாமோதர சாபேக்கர்
(பலிதானம்: ஏப். 18)
 .
(பலிதானம்: ஏப். 18)
 .
(முக்தி: ஏப். 24)
 .
மு.வரதராசனார்
(பிறப்பு: ஏப். 28)
 .
கணிதமேதை ராமானுஜன்
(நினைவு: ஏப். 26)
 .
.

கவிஞர் பாரதிதாசன்
(பிறப்பு: ஏப். 29)

சுவாமி சகஜானந்தர்
(நினைவு: மே 1)

தளவாய் வேலுத்தம்பி
(பிறப்பு: மே 6)

(பிறப்பு: மே 7)

கோபாலகிருஷ்ண கோகலே

(பிறப்பு: மே 9)

கஸ்தூரிபா காந்தி
(பிறப்பு: மே 9)

மொரார்ஜி தேசாய்
(நினைவு: மே 10)

.

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரர்

-ஆசிரியர் குழு

மகாவீரர்

மகாவீரர்

(மகாவீர் ஜெயந்தி: ஏப்ரல் 2)

சமண சமயத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாபெரும் ஜைன மதத்துறவி மகாவீரர் ஆவார். மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர். ஜீனர் (வென்றவர்), மாமனிதர், ஞானப்புத்திரர், அதிவீரர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகப் போற்றப்படுகின்றன. தன்னுடைய 32 வயதிலேயே மனித வாழ்க்கையின் உனையை உலகத்திற்கு எடுத்துரைத்த ‘வர்த்தமானரை’ நினைவு கூறும் வகையில், உலகெங்கும் உள்ள ஜைனர்கள் அவருடைய பிறந்த நாளான ஏப்ரல் 2- ஆம் தேதியை, ஒவ்வொரு வருடமும் ‘மகாவீரர் ஜெயந்தியாக’ கொண்டாடுகின்றனர்.

சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: கி.மு. 599, சித்திரை -வளர்பிறை திரையோதசி

இறப்பு: கி. மு. 527, ஐப்பசி- தேய்பிறை சதுர்த்தசி- தீபாவளி நன்னாள்

‘வர்த்தமானர்’ என்ற இயற்பெயர்கொண்ட  ‘மகாவீரர்’ கி.மு. 599 வருடம்,  பிகார் மாநிலம், வைசாலிக்கு அருகிலுள்ள  ‘குண்டா’ என்ற இடத்தில் சித்தாத்தர் என்பவருக்கும், திரிசாலாவுக்கும் மகனாக ஒரு அரசக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் இட்டப் பெயர்  ‘வர்த்தமானர்’ ஆகும்.

அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். இருப்பினும் அச்சிறுவயதிலே ஆன்மீகநாட்டம் கொண்டவராகவும், தியானத்திலும், தன்னறிவதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

பின்னர் யசோதரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். சமணத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், பிறகு இல்லற வாழ்விலிருந்து விலகி, தன்னுடைய முப்பதாவது வயதில் அரச வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டார்.

மகாவீரரின் ஆன்மிகப் பயணம்

மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, சுமார் பனிரெண்டு ஆண்டுகள் தியானம் மற்றும் ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட மகாவீரர் அவர்கள்,  ‘சாலா’ என்னும் மரத்தடியில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அவர்  ‘மகாவீரர்’  என அழைக்கப்பட்டார். மகாவீரர் என்றால், ‘பெரும்வீரர்’ என்று பொருள் ஆகும்.

தான் கண்ட உண்மைகளை உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்பிய மகாவீரர், இந்தியா முழுவதும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு, தாம் அறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தார். வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டது மட்டுமல்லாமல், சமண சமயம் இந்தியாவெங்கும் தீவிரமாக பரவத்தொடங்கியது.

இதனால், சமண மத குருமார்கள் வரிசையில் மகாவீரர் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகப் போற்றப்பட்டார். இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.

மகாவீரரின் போதனைகள்

இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் என சமணர்களால் போற்றப்படும் மகாவீரரின் போதனைகள், அன்பையும், மனிதநேயத்தையும், அகிம்சையையும் போதிக்கும் உன்னதக் கோட்பாடுகளாக விளங்குகின்றன.

மகாவீரர், ‘ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓர் ஆத்மா உண்டென்றும், அது, தனது நல்ல அல்லது கெடுதல் செயல்களின் விளைவாக  ‘கர்மா’ என்னும் வினைப் பயன்களை அடைய நேரிடும்’ என்றும் போதித்தார். இதிலிருந்து விடுபட, மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ போன்றவற்றை கடைப்பிடித்தால், ‘சித்த நிலையை அடையலாம்’ எனவும் போதித்தார்.

மேலும், ‘எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருத்தல், உண்மையை மட்டும் பேசுதல், திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருத்தல்’ என ஐந்து பண்புகளும் ஜைன மதத்தின் உறுதிமொழிகளாக விளங்கின. உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார்.

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகாட்ட வேண்டும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும், கொல்லாமையுமே அறநெறி எனக் காட்டி அகிம்சை வழியையும், அன்பு வழியையும் மக்களுக்கு உணர்த்தி, சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527-ல் பிகாரிலுள்ள  ‘பவபுரி’ என்னும் இடத்தில் தன்னுடைய 72-வது வயதில் காலமானார்.

நன்றி:  இட்ஸ் தமிழ்

காண்க:

அஹிம்சை தத்துவத்தின் மூலவர்

%d bloggers like this: