நோபல் இந்தியர்கள்

உலக அளவில் பிரபலமான  நோபல் பரிசு  இதுவரை இந்தியாவைச்  ‘சார்ந்த’  14 பேருக்குக் கிடைத்துள்ளது.

விருது பெற்ற ஆண்டு, துறை, சாதனை,  நாடு  ஆகியவற்றுடன் நோபல் விருதாளர்களின் பட்டியல் இது…

.

1. ரொனால்டு ராஸ் (1902)

துறை: மருந்தியல்

சாதனை: மலேரியா நோயை உண்டாக்கும் பிளோஸ்மோடியம்  தொற்றுயிரியை அனாஃபிலஸ் கொசுவில் கண்டறிந்தது.

குறிப்பு: இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் (இங்கிலாந்து).

.

2. ஜோசப் ரட்யார்ட் கிப்ளிங் (1907)

துறை: இலக்கியம்.

சாதனை: ஆங்கில இலக்கியத்தில் பலவிதங்களில் முன்னோடி.

குறிப்பு: இந்தியாவில் பிறந்த அயல்நாட்டவர் (இங்கிலாந்து).

.

3. ரவீந்தரநாத் தாகூர் (1913) 

துறை: இலக்கியம்.

சாதனை: உலகப் புகழ் பெற்ற  ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பு.

குறிப்பு: நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்; வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்.

.

4. சந்திரசேகர் வெங்கட்ராமன் ( 1930)

துறை: இயற்பியல்.

சாதனை:  ‘ராமன்விளைவு’ எனப்படும் ஒளியின் அலைநீள மாற்றம் தொடர்பான ஒளியியல் கண்டுபிடிப்பு.

குறிப்பு: நோபல் பரிசு  பெற்ற இரண்டாவது இந்தியர்;  தமிழகத்தின் கும்பகோணத்தில் பிறந்தவர்.

.

5.  ஹர் கோவிந்த குரானா (1968)

துறை: மருந்தியல்.

சாதனை: மரபுக் குறியீடு (genetic code) பற்றியும் புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு குறித்தும் செய்த ஆய்வு.

குறிப்பு: இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர்  (அமெரிக்கா).

.

6. அன்னை தெரேசா (எ) ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (1979)

துறை: உலக அமைதி.

சாதனை: எளியோருக்கான சமூகசேவை.

குறிப்பு:  அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட, இந்தியக் குடியுரிமை பெற்றவர்; கொல்கத்தாவில் வாழ்ந்தவர்..

.

7. அப்துஸ் சலாம் (1979)

துறை: இயற்பியல்

சாதனை: மின்காந்த சக்தி,  கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்தது.

குறிப்பு: பிரிக்கப்படாத இந்தியாவில், சாஹிவால் மாவட்டத்தில் பிறந்தவர்; பிற்பாடு பாகிஸ்தான் குடிமகன் ஆனவர்.

.

8. சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983)

துறை: இயற்பியல்.

சாதனை: விண்மீன்கள் பற்றிய  ஆய்வு.

குறிப்பு:  இந்தியாவின் த்மிழகத்தில் பிறந்து,  அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். இவரது சித்தப்பா விஞ்ஞானி சி.வி.ராமன்.

.

9. தலாய் லாமா (எ) டென்சின் கியாட்சோ (1989).

துறை: உலக அமைதி.
சாதனை:  திபெத்தில் ஜனநாயகத்தை மீட்க தொடர் போராட்டம்.
குறிப்பு: திபெத்தில் பிறந்து, இந்தியாவில் அடைக்கலாமனவர்.
.
10. அமர்த்தியா சென் (1998)

துறை: பொருளாதாரம்.

சாதனை:  சமூகநல பொருளாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வு.

குறிப்பு: நோபல் பரிசு பெற்ற மூன்றாவது இந்தியர்; மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.

.

11.  வி.எஸ்.நைபால் (2001)

துறை: இலக்கியம்

சாதனை: மறைக்கப்பட்ட நாடுகளின் வரலாறுகளை உலகளாவிய சிந்தனையுடன் தனது எழுத்தில் துலக்கம் பெறச் செய்தவர்.

குறிப்பு:  இந்திய வம்சாவளியில் பிறந்த அயல்நாட்டவர் (டிரினிடாட்).

.

12. முகமது யூனுஸ் (2006).

துறை: உலக அமைதி.

சாதனை: ஏழை மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்; கிராமின் வங்கியை தோற்றுவித்தவர்.

குறிப்பு: பிரிக்கப்படாத இந்தியாவில், சிட்டகாங்கில் பிறந்தவர்; பிற்பாடு வங்கதேசக் குடிமகன் ஆனவர்.

.

13.  வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009)

துறை: வேதியியல்.

சாதனை: அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான  ‘ரைபோசோம்’ (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வு.

குறிப்பு: இந்தியாவின் தமிழகம், சிதம்பரத்தில் பிறந்து,  அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்.

.

14. கைலாஷ் சத்யார்த்தி (2014)

துறை: உலக அமைதி.

சாதனை: குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து 80,000-க்கு மேற்பட்ட குழந்தைகளை மீட்டவர்;  ‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) நடத்தி வரும் சமூக சேவகர்.

குறிப்பு: இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர். நோபல் பரிசு பெறும் நேரிடையான இந்தியர்களுள் ஏழாமவர்.

2014-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் கல்வி உரிமைப் போராளியான சிறுமி மலாலா யூசுப்சாய் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: