யுவ காண்டீபம் – மின்னிதழ்கள்

1. யுவ காண்டீபம் – மின்னிதழ் (தை 2020)

2. யுவ காண்டீபம் – மின்னிதழ் (மாசி2020)

3. யுவ காண்டீபம் – மின்னிதழ் (பங்குனி 2020)

4. யுவ காண்டீபம் – மின்னிதழ் (சித்திரை 2020)

5. யுவ காண்டீபம் – மின்னிதழ் (வைகாசி 2020)

 

 

மகத்தான மாமனிதரின் நூற்றாண்டு இது!

-சேக்கிழான்

தத்தோபந்த் தெங்கடி

(1920 நவ. 10- 2004 அக். 14)

தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய  பாரதீய சிந்தனையாளர்களுள் அமரர் திரு. தத்தோபந்த் தெங்கடிக்குமுதன்மையான இடமுண்டு. அவர் சிந்தனையாளர் மட்டுமல்லாது நிகரற்ற அமைப்பாளராகவும் விளங்கினார். கட்சி அரசியலைத் தாண்டி ஹிந்துத்துவ சிந்தனையைக் கொண்டுசென்று, தனக்கே உரிய வழியில் அதற்கு நவீன வடிவமும் கொடுத்தார் தெங்கடி. இன்று அவரது பிறந்த நூற்றாண்டு துவங்குகிறது.

1920 நவம்பர் 10இல் அன்றைய மராட்டியத்தின் வார்தா மாவட்டத்தில் ஆர்வி கிராமத்தில் தஎங்கடி பிறந்தார். பெற்றோர்: பாபுராவ் தெஜீபா தெங்கடி- ஜானகி தேவி.

15 வயதிலேயே தன்னையொத்த குழந்தைகளை இணைத்து வார்தா வட்ட காங்கிரஸ் கட்சிக்குள் வானர சேனை என்ற அமைப்பைத் துவங்கி இயங்கியவர்; படிக்கும் காலத்தில் (1936- 38) ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற அமைப்பில் இணைந்து விடுதலைக்காகப் போராடியவர் தெங்கடி. Read the rest of this entry

ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்

-சுவாமி சித்பவானந்தர்

 

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863.

சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985

 .

கந்தன் கலியுகவரதன்  எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன.

கடவுள் காட்சிகளுள் செம்பொருளைக் கந்தனாகக் காணும் காட்சி மிக எளியது; பக்குவமடையாத உயிர்களுக்கும் விளங்கவல்லது. கந்தனை அறிந்து அவனைப் போற்றுகின்றவிடத்துப் போற்றுகிறவன் விரைவில் பெருநிலை எய்துகிறான். கந்தனைப் பற்றிய உண்மைகளையெல்லாம் அருணகிரிநாதர் ஓர் எளிய திருப்புகழில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:

      ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே

                ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

        கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே

                குன்றுருவ வேல்தாங்கி நின்றமுகம் ஒன்றே

        மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்றே

                வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

        ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

                ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

என்பது அத்திருப்புகழ் ஆகும். கந்தனுக்கு அமைந்துள்ள ஆறு இயல்புகளையும் ஆராய்வதற்கு ஏற்ப நமது அறிவு தெளிவுறும். இனி, இவ்வாராய்ச்சியில் மற்றொரு மகிமை புதைந்திருக்கிறது. இக்காலத்தில் தோன்றியுள்ள மக்களுள் மிக மேலோன் ஆவார் சுவாமி விவேகானந்தர். அவரைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் சமயத்தைச் சரியாக அறிந்து கொள்ளுபவர்கள் ஆவார்கள். விவேகானந்தரைச் சரியாக அறிந்து கொள்பவர் சமய அனுஷ்டானத்தையும் அறிந்து கொள்பவர் ஆவார்கள்.

விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம். Read the rest of this entry

‘காண்டீபம்’ பிறந்தது!

-ஆசிரியர் குழு

kandeepam-fun-1

‘காண்டீபம்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன், ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி, ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சிவானந்தன் ஆகியோர்.

 

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் திருப்பூரில் கடந்த 2016, அக்டோபர் 11-இல் நடைபெற்ற  விஜயதசமி விழாவில் தேசிய விழிப்புணர்வுக் காலாண்டிதழான ‘காண்டீபம்’  முதல் இதழ் வெளியிடப்பட்டது.

ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, விஜயதசமி விழா, காண்டீபம் காலாண்டிதழ் வெளியீட்டு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழாவை, தேசிய சிந்தனைக் கழகம், அறம் அறக்கட்டளை, ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2016, அக். 11-ஆம் தேதி  நடத்தின.

விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சா.சிவானந்தன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன், திருப்பூர் கோட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் ‘ராமானுஜத்தின் இன்றைய அவசியம்’ என்ற தலைப்பில், தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி பேசினார்.

‘காண்டீபம்’ காலாண்டிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கலாநிதி வெளியிட, ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி பெற்றுக் கொண்டார். தஞ்சை வெ.கோபாலன் எழுதிய ‘சுதந்திர கர்ஜனை’ நூலும் விழாவில் வெளியிடப்பட்டது.

book-1-wrapper

ஐப்பசி-2016 இதழ்

நிறைவாக,  ‘வெற்றிக்கு வழி’ என்ற தலைப்பில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்  “தேசிய சிந்தனை வளர்க்கும் பணியை பத்திரிகைகள் அடிப்படைப் பணியாக மேற்கொள்ள வேண்டும். நமது இளைஞர்கள் உலக அளவில் சாதனை புரிய தேசிய சிந்தனையே உரமாக இருக்கும்” என்றார்.

விழாவில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் குழலேந்தி, செயலாளர் சத்தியப்பிரியன், கோட்டச் செயலாளர் சு.சத்தியநாராயணன், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பக்தவத்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்…

-ம.விவேகானந்தன்

Guru-Gobind-Singh

குரு கோவிந்த சிம்மன்

(பிறப்பு: 1666, டிசம்பர் 22 – மறைவு: அக்டோபர் 7)

1675-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேக்பகதூரைச் சந்திக்க காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் பஞ்சாபின் அனந்தபூருக்கு வந்திருந்தார்கள். இ.ஃப்திகார் கானின் முஸ்லிம் மதவெறிக் கொடுமைகளைத் தாங்க முடியால் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றிருந்தார்கள்.

அனைத்தையும் கேட்டறிந்த அவர்  “இந்தக் கொடுமைகளில் இருந்து மீள வேண்டும் என்றால் மகத்தான ஒருவர்,  தனது தலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த குரு தேக் பகதூரின் ஒன்பது வயது மகனான கோவிந்த சிம்மன் தந்தையைப் பார்த்து வெகுளியாக “அப்படிப்பட்டத் தியாகத்துக்குத் தங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை” என்றான்.

அதையே மனதில் ஏற்று குரு தேக் பகதூர் முகலாய ராஜ்யத்தின் தலைநகரை நோக்கிப் பயணமாகிக் கைதாகி நவ 11, 1675 அன்று பலிதானமானார்.

ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால், துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம், அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், குருவின் அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்குத் தப்பிச் சென்றார். Read the rest of this entry

%d bloggers like this: